Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, December 5, 2010

வாழ்க நீ எம்மான்!

ஹே ராம் !
        இந்த படம் 1983-இன் ஜூலை மாத முற்பகுதியில் தொடங்கப்பட்டு , 22-ம் தேதி நிறைவு பெற்றது. தேசப் பிதாவின் உருவம் புள்ளிப் புள்ளியாய் உருப்பெற்றபோது அளவிட முடியாத சந்தோஷம் பெருகியது. எம் பெற்றோரும், நெருங்கியவர்களும் ஸ்லாகித்துப் பாராட்டிய ஓவியம். ஆனால், இந்த ஓவியத்தை இப்போது பார்க்கையில் , மதுவிலக்கு ரத்து, கோடி,கோடியாக லஞ்சம், ஊழல், சாத்வீகத்தை விழுங்கும் வன்முறைகள், விவசாயத்தையும், கிராமங்களையும் புறக்கணித்த நடைமுறை வாழ்க்கை - என்ற எத்தனையோ புள்ளிகளால் 'மஹாத்மாவை ரணப்படுத்துகிறோமோ' என்கிற நடுக்கம் தோன்றுகிறது.
                                             'எல்லாம் மாறுதலுக்குட்பட்டதே'   

15 comments:

Rekha raghavan said...

//'மஹாத்மாவை ரணப்படுத்துகிறோமோ' என்கிற நடுக்கம் தோன்றுகிறது//

அதான் படத்தில் போட்டுவிட்டீர்களே "ஹே ராம்"னு. புள்ளி ஓவியம் மிகவும் அருமை.
தொடரட்டும் உங்கள் புள்ளி ஓவியங்கள்.

Chitra said...

///என்ற எத்தனையோ புள்ளிகளால் 'மஹாத்மாவை ரணப்படுத்துகிறோமோ' என்கிற நடுக்கம் தோன்றுகிறது.////


......ஓவியம் - அருமை. பாராட்டுக்கள்!
அதன் கீழே உள்ள கருத்து - சிந்திக்க வைக்கிறது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இன்றை அன்றே பார்த்த மஹானை இன்று பார்க்க வருத்தமாக இருக்கிறது எல்லென்.

இருந்தாலும் உங்கள் புள்ளியால் வரையப்பட்ட பெரும்புள்ளியாய் காந்தியின் அமைதி வழிகிறது ஓவியத்தில்.

வெங்கட் நாகராஜ் said...

உங்களது புள்ளி ஓவியம் அருமை. உங்களது பென்சில் புள்ளிகளை விட இப்போது பலப்பல புள்ளிகள் அவரை கலங்கடித்துக்கொண்டு இருக்கிறது நினைத்தால் வேதனை. பகிர்வுக்கு நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இந்த படம் ‘லியானோர்டோ டாவின்ஸி’க்கு ’மோனாலிஸா’, 'MY LAST SUPPER' போன்று புகழ் பெற வேண்டும் என்ற வாழ்த்துக்களுடன்,

ஆர்.ஆர்.ஆர்.

ரிஷபன் said...

ஒரு ஓவியம் பேசுமா? இதோ மௌனமாய்ப் பேசுகிறதே.. எவ்வளவோ விஷயங்கள்..

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

நன்றி ....ரேகா ராகவன் சார்..

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

தங்களின் நேர்மறை விமரிசனத்திற்கு நன்றி,சித்ரா மேடம்!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

தங்களின் விமரிசனத்திற்கு நன்றி,சுந்தர்ஜி.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

தங்களின் இதயபூர்வ வாழ்த்திற்கு நன்றி, ஆர்.ஆர்.ஆர் அவர்களே. இந்த மாதிரி புள்ளி ஓவியங்கள் எத்தனையோ மிக பிரம்மாண்டமான ஜாம்பவான்களால் அனாயாசமாக கையாளப்பட்டன. அடியேனும் அதை முயன்று பார்த்தேன்.உங்கள் பாராட்டிற்கு மறுபடியும் நன்றி!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//ஒரு ஓவியம் பேசுமா? இதோ மௌனமாய்ப் பேசுகிறதே.. எவ்வளவோ விஷயங்கள்..//அத்தனை விஷயங்களும் ஆக்கபூர்வமானதாக...

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

//ஒரு ஓவியம் பேசுமா? இதோ மௌனமாய்ப் பேசுகிறதே.. எவ்வளவோ விஷயங்கள்..//அத்தனை விஷயங்களும் ஆக்கபூர்வமானதாக... நன்றி ரிஷபன் சார்!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

'வேதனைகளும் மாறுதலுக்கு உட்பட்டவையே.'

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் அவர்களே!

kiran sawhney said...

Jai Guru Dev

சிவகுமாரன் said...

ஆகா இத்தனை நாள் பார்க்காமல் விட்டேனே இந்த மகாத்மாவையும் கலைஞனையும்