Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, May 22, 2011

                             சின்முத்ரா 



                 தியானத்தின் போது கைகளை இந்த படத்தில் உள்ளது போல் வைத்துக் கொண்டு த்யானிப்பது மிக விசேஷமானது. இதற்கு நாட்டிய  சாஸ்த்ரத்தில்  சின்முத்திரை என்று பெயர்.

                  தனித்தன்மைப் பெற்றிருப்பதாலும் , அதில்லாமல் மற்ற விரல்களின் இயக்கங்கள் ஸ்தம்பித்து விடும் என்பதாலும் கட்டை விரல்  - பரமனைக் குறிக்கிறது.
                  சுட்டிக் காண்பிப்பதின் மூலம் மனித தாத்பர்யத்தை உணர்த்துவதால் , சுட்டு விரல் - ஜீவனைக் குறிக்கிறது.

                  மோதிரம் அணிவதற்காக பிரத்தியேகமாக உள்ள மோதிர விரல் - பொன்னைக் குறிக்கிறது.

                  பாம்பைக் குறித்து , பாம்பு உறையும் இடத்தை உணர்த்தும்  பாம்பு விரல்  - மண்ணைக் குறிக்கிறது.

                  நளினமானதாலும் , மென்மையானதாலும் கடைசியான சிறு விரல்பெண்ணைக் குறிக்கிறது.

                  ‘அதாவது , சுட்டுவிரல் கட்டைவிரலைத் தவிர மற்ற மூன்று விரல்களுடன் இயைந்து அமைந்திருப்பது போல் ஜீவாத்மா எப்போதும் மண், பொன், பெண் ஆகியவற்றில் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட ஜீவாத்மா , பரமாத்மாவை அடைய வேண்டுமானால் அம்மூன்றிலிருந்தும் விலகி வர வேண்டும். பிறகுதான் பரமனை அடைவது சாத்தியம்’ என்கிற அரிய தத்துவத்தை உணர்த்துகிறது இந்த சின்முத்திரை.   

*******************



7 comments:

நிலாமகள் said...

சின்முத்திரை ப‌ற்றிய‌ தாத்ப‌ர்ய‌ம் அறிய‌த் த‌ந்த‌மைக்கு ந‌ன்றி ஐயா.ம‌ற்ற‌ முத்திரைக‌ள் ப‌ற்றியும் ப‌திவிடும் எண்ண‌மிருக்கிற‌தா? யோக‌த்திலும், தியான‌த்திலும், ப‌ர‌த‌த்திலும் பிர‌தான‌ இட‌ம் பெற்ற‌வையாயிற்றே...

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா ............
என்னே அற்புத விளக்கம் , நம் முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் ஒரு அர்த்தம் இருக்கின்றது , நாம் தான் அதை அறிந்து கொள்ளாது இருக்கிறோம் , இந்த அற்புத விளக்கத்திற்கு மிக நன்றி அய்யா

இராஜராஜேஸ்வரி said...

அற்புத விளக்கத்திற்கு மிக நன்றி ..

ரிஷபன் said...

என்ன திடீர்னு யோக மார்க்கம்?

வெங்கட் நாகராஜ் said...

சின் முத்திரை பற்றிய நல்ல விளக்கம். நன்றி நண்பரே.

பத்மநாபன் said...

சின்முத்திரையின் பௌதிக / ஆன்மீக விளக்கம் அருமை ...இது தாண்டி சின்முத்திரை இடும் பொழுது நரம்பியல் சுற்றில் பெருவிரலில் கொடுக்கும் அழுத்தம் ஆக்ஞை எனும் நெற்றிக்கண் அருகில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியின் ஹார்மோன்களை சீராக்கி மன அலைச்சலை கட்டுப் படுத்துவதாக படித்துள்ளேன்

DREAMER said...

அருமையான விளக்க தகவல்கள்..! நன்றி..!

-
DREAMER