Pages

நேசம் நம் சுவாசம் !

Saturday, May 14, 2011

முதுமை

அடங்கப்போகும்  மனசுக்குள் 
சாஸ்வத சோகம்
மேகத்திட்டாக வியாபிக்கிறது;
சுவாசத்தின் பிரயத்தனத்தில் கூட 
ஆயாசம் சுதந்திர நடை போடுகிறது;
சாளரத்தின் அரையிருட்டில் 
நிச்சலனமாய் விட்ட 
பழைய பரிணாமக் கோட்பாடு 
ஒற்றைக் காலணியாய் தவம் கிடக்கிறது.
ஏன் 
விடியலுக்கு 
மட்டுமிந்த அர்த்தமுள்ள மோனம்?



_கணையாழி பிப்ரவரி-1983 இதழில் வெளியானது.  
 
 

7 comments:

ரிஷபன் said...

சாளரத்தின் அரையிருட்டில்
நிச்சலனமாய் விட்ட
பழைய பரிணாமக் கோட்பாடு
ஒற்றைக் காலணியாய் தவம் கிடக்கிறது.

சூப்பர்..

குறையொன்றுமில்லை. said...

அருமையான கவிதை. சுருக்கமாக அழகாக.

பத்மநாபன் said...

மனத்தின் சாஸ்வத சோகம்.... ஆயாசத்தின் சுதந்திர நடை... அழுத்தமான வார்த்தை பிரயோகங்களோடு அருமையான கவிதை..

A.R.ராஜகோபாலன் said...

அற்புதமான கவி நயம்
உங்களின்
வார்த்தை பிரயோகம்
பிரமாண்ட பிரவாகம்
பிரமித்தேன்

Yaathoramani.blogspot.com said...

அடங்கப்போகும் மனசுக்குள்
சாஸ்வத சோகம் மேகத்திட்ட்டாய்...
அழகான சொற்பிரயோகம்
வரிவடிங்கள் இயல்பாக என்னுள்
நிஜ வடிவங்களாக விரிகின்றன
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை அருமை எல்லன் நிஜமாய்.....

இராஜராஜேஸ்வரி said...

பழைய பரிணாமக் கோட்பாடு
ஒற்றைக் காலணியாய் தவம் கிடக்கிறது.//
nice.