நானும் மனிதன்
அநித்ய
பயங்களிலேயே ஜனித்து ,
உயிர்ப்பு உணர்வுடன்,
சராசரத்தை
கூடிய மட்டில் அசுத்தமாக்கி ,
சாதாரணங்களோடு
சர்வ சாதாரணமாய் ;
புலன் மீறி விதிர்த்து
புணர்வில் மிக லயித்து
விருத்தி பாசுரத்தை மட்டும்
சுவர்க் கோழிகளுடன்
நள்ளிரவில் உச்சாடனம் செய்து
அடுத்த தலைமுறைக்கு
பதில் கூறிய பெருமையுடன்
இதோ ....
அடங்கப் போகிறேன் .
('கணையாழி' மீண்டு(ம்) வெளிவருவதில் மகிழ்வுறும் எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன். இந்த சந்தர்ப்பத்தில் 'கணையாழி' செப்டம்பர் - 1982 இல் ஜீவிதன் என்கிற புனைபெயரில் அடியேன் எழுதி பிரசுரமான கவிதை)
14 comments:
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
மிக நல்ல கவிதை. வாழ்த்துக்கள். மேலும் எழுதிக்கொண்டே இருங்கள்.
நன்று !
கணையாழி திரும்ப வருகிறதா!மகிழ்ச்சி!
கணையாழி மீண்டும் வருகிறதா? நல்ல செய்தி எல்லென். கவிதையும் நன்றாக இருக்கிறது.
நல்ல கவிதை! மீன்டும் நிறைய கவிதைகள் எழுதுங்கள்!! கவிதைக்கு நீங்களே உணர்வுகள் மின்னும் ஒரு பொருத்தமான ஓவியத்தை வரைந்திருக்கலாமே?
எம் வலைப்பூவிற்கு முதன் முறையாக வருகை புரிந்தமைக்கு மிகவும் நன்றி...திரு.ரத்னவேல் அய்யா அவர்களே..
நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு நன்றி.லக்ஷ்மி மேடம்...
ஆம்...கணையாழி திரும்பவும் வெளிவர உள்ளது.தன்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...திரு.சென்னைபித்தன் அய்யா..
ந்ன்றி திரு வெங்கட்நாகராஜ் அவர்களே.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி, மனோசுவாமிநாதன் மேடம்.. வரைந்திருக்கலாம்தான்....இனி வரும் இடுகைகளில் உங்களின் ஆலோசனையை நடைமுறைப் படுத்துகிறேன்.
கணையாழி மீண்டு வருகிறது என்று சௌரிராஜன் சொன்னார்.. உங்கள் கவிதை படிக்க ஆரம்பித்ததும் 'அட.. இது கணையாழி கவிதையாச்சே ' என்று யோசித்தேன்.. அது ஒரு பொற்காலம்!
ada kavithai!
தங்கள் கவிதையைப் படித்ததும்
ல.ச.ர.வின் நினைவு ஏனோ
வந்து போனது
அற்புதமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கணையாழி திரும்ப வருகிறதா!மகிழ்ச்சி!
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
Post a Comment