Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, January 2, 2011

சங்கீத சீசன் 
            திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்த நாட்கள் எம் வாழ்வின் மறக்கவொண்ணாத இனிய நிகழ்வு....எத்தனையோ கச்சேரிகளை இசைப்பதிவு செய்யும் பாக்கியம் கிடைத்தது...மனம் நிறைந்த சந்தோஷத்துடன் குதூகலமாக பதிவு செய்த கச்சேரிகள் இன்றும் AIR -இன் இசைக் கருவூலத்தில் உள்ளன.
                  இசை விற்பன்னர்கள் மேடையேறி அமர்ந்ததும் எங்கள் எல்லோர்க்கும் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். அவர்கள் ஸ்ருதியை சரிபார்க்கிற நேரத்திற்குள் நாங்கள் balancing  செய்ய தயாராக இருக்க வேண்டும். ரசிகாசைப் பார்த்து ஒரு புன்முறுவல் புரிந்து விட்டு அவர்கள் இசைக்கத் துவங்கும்போது balancing  பணி ஆரம்பிக்கும். அதாகப்பட்டது ,அந்த மேடையை அலங்கரிக்கும்  எல்லா கலைஞர்களின் குரல் மற்றும்  வாத்தியங்களின் ஒலி அளவை  amplifier  -இல்  தேவைக்கேற்ப கூட்டி, குறைத்து ரம்யமான இசையைக் காற்றில் தவழ விடும் ரசவாதம். கொஞ்சம் பிசகினாலும் எவரும்  ரசிக்க முடியாது.
                 எனக்கு இந்த வேலை சுலபமாக இருந்ததற்கு காரணம் இசை மீதான என் பிரத்யேக காதல். அனுபவித்து balancing   -ஐ முடித்து விட்டு மேடையை அலங்கரிக்கும் அந்த இசை மேதையை கிடைத்த பேப்பரில்  வரைந்து 'தனி' நேரத்தின்போது அவரிடம் ஆட்டோக்ராப் வாங்கி விடுவேன்....  அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்களில் வரையப்பட்ட சில ஓவியங்கள் இந்த வாரம் உங்களின் பார்வைக்கு...


                   27 .04 .1981 அன்று குன்னக்குடி திரு. வைத்யநாதன் அவர்களின் கச்சேரி. தன் மோகன சிரிப்பை சிந்தியபடி வியப்பில் தன் கண்களை அகல விரித்து ,"ஆஹா ... என்னை படமா வரைஞ்சுட்டேளா?  பேஷ்" என்றபடி கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.
                      திருவாரூரில் நடந்த சங்கீத மும்மூர்த்திகள் விழாவில் மண்டலின் வாசித்த U  சீனிவாஸ் ஒரு பால் வடியும் முகம் கொண்ட குழந்தை  ... 89 -ம் வருடம்.                    1993 -ம் வருடம் திருமதி சரஸ்வதி ராமநாதன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.. அந்த பாசம் மிகுந்த சகோதரியின் அறிவுத்திறனையும், பேச்சுதிறனையும் அருகிருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.வாய் நிறைய எனை 'லக்ஷ்மிநாராயணன்' என்று அழைத்து அன்பு பாராட்டிய பெருந்தகை .
                    மார்ச் மாதம்..... 1989  -ம் வருடம் . மிகவும் சாஸ்த்ரீயமாய் வாசித்துக் கொண்டிருந்தார் லால்குடி திரு.ஜெயராமன். கையெழுத்தில் தன் பங்கிற்கு வயலினை வரைந்து விட்டு 'இது எப்படி இருக்கு ?' என்ற பாணியில் என்னைப் பார்த்து முறுவலித்தார்.

                     திருவாரூர் கச்சேரி... சாயந்திரம்  ஆறு மணிக்கு...மூணே முக்காலுக்கெல்லாம் 'வேகு வேகென்று' தனது வாத்திய பெட்டி சகிதம் பந்தலுக்குள் நுழைகிறார், அந்த கலைஞர். ஒரு சேரில் அமர்ந்து இளைப்பாறிக்கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது... அட.. இது கத்ரி அல்லவா...ஓடோடிச்சென்று வரவேற்கிறேன்.."எனக்கு ஒரு ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுக்கணும்... கொஞ்சம் ஏற்பாடு பண்ண முடியுமா?" என்று மிக பணிவுடன் கேட்ட அந்த மாமேதையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. காரியதரிசிஇடத்து  கூட்டிச் சென்று  அவருக்கு உதவ முடிந்ததது.
                    வழக்கம் போல் 'தனி ஆவர்த்தனத்தின்' போது அவருடைய படத்தை நீட்டி ஆட்டோக்ராப் கேட்டபோது  "ஓ ...நீங்களா?"என்று என்னையும் நினைவில் வைத்து கேட்டு , கையெழுத்து போட்டுக் கொடுத்தார்.என்ன தவம் செய்தேனோ !!

9 comments:

Rekha raghavan said...

சித்திரம் பேசுதடி!-ன்னு பாடத் தோன்றியது. அருமை.

சிவகுமாரன் said...

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

வெங்கட் நாகராஜ் said...

இசைக் கலைஞர்களின் ஓவியம் வரைந்து அவர்களிடமே கையொப்பம் பெற்று அவற்றை எங்களுடன் பகிர்ந்த உங்களுக்கு மிக்க நன்றி.

ரிஷபன் said...

சங்கீத ஆலாபனை.. சிலர் பாடினால் அப்படியே காட்சி ஓவியமாய் தெரியும் என்பார்கள்.. இங்கே பாடகர்களே ஓவியமாய்.. சபாஷ்.. எல்லென்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அருமை..அருமை..தொடரட்டும் உங்கள் இலக்கிய,ஓவிய,சங்கீதப் பணிகள்..அந்த கால விகடன் தீபாவளி மலரில் பெரிய வைத்தி,மதுரை மணி,ஜி.என்.பி.செம்பை போன்றவர்களை மாலி
வரைந்த ஞாபகம் வந்தது!

சிவகுமாரன் said...

பேராசை தான்.
எப்போது வரைவீர்கள்
என்னையும் ஓவியமாய் ?

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

மிக்க நன்றி திரு. ரேகா ராகவன் சார், திரு. வெங்கட் நாகராஜ், திரு. ரிஷபன்,திரு.சிவகுமாரன் திரு.ஆர்.ஆர்.ஆர்.

பேராசைஎன்ன பேராசை.... உங்கள் போட்டோவை மெயில் பண்ணுங்கள் சார்... வரைந்து ஜமாய்ச்சுடுவோம்...அடியேனின் மெயில் aarellen59 @ yahoo .co .in

Matangi Mawley said...

Very Innovative, sir!! :)

unga AIR ninaivukal rombave swaarasyamaa irunthathu... "thiruchchy"-- paaththuttu thaan intha blog-ku vanthen..

romba nalla padam ellaame...

I esp. like Lalgudi.... :) antha violin varaintha anubavam ungalodathu-- pokkisham! :D

sooper-dooper! :D

aarvie88 said...

priya aal pongo!!!!
ivlo peroda autographed drawings vechundrukele!!!!!