துக்கமும் சோகமும் எமது வாழ்க்கைத் தளத்தில் ஆளுக்கொரு பக்கமாய் இருந்து கொண்டு 'சடுகுடு' ஆடின காலகட்டம் அது (ஏப்ரல் '81). ஆறுதலாய் கிடைத்த நிழல், வயலினில் சாதகம். அந்த அனுபவத்தை அறிமுகப்படுத்திய அதியற்புத நண்பரின் அண்மையும் , அந்த தருணமும் மனதில் உறைந்து கிடக்கின்றன.
அப்போது வெளிவந்த 'ராஜபார்வை' படத்தின் ஸ்டில்லை எடுத்து வைத்து வரைந்தபோது ஏற்பட்ட பரவசமும்,நிறைவும் கண்களை பனிக்க வைத்தன.அந்த படம் கமலுக்கு ஒரு மைல்கல் என்றால் , எமக்கோ இந்த வரைபடம் நினைவுக்கீறல். வாழ்க வயலின்!
|
சாஸ்வத சோகம்
|
4 comments:
உங்களதும் ராஜபார்வைதான் எல்லென்.ஓவியம் சொல்கிறது கமலின் கண்களின் வழியே.
அழகுப் பார்வை!
ஆஹா..அருமை! பென்சில் ஓவியம் மட்டும் தான் வரைவீர்களா,எல்லென்?
'உங்களதும் ராஜபார்வைதான்'
இதே வார்த்தையைத்தான் பின்னோட்டமிட.. வந்தால் அதையே சுந்தர்ஜி எழுதிவிட்டார்.
ம்ம்..வேறு என்ன சொல்லருது...
கண்ணில் காட்சி தெரியும், உங்களின் வரைவின் நீட்சி அந்தக் கண்ணில் தெரிகிறது.
'அந்தகக்கண்'?
Post a Comment